அறிமுகம்:
“என்னதான் கஷ்டமான வேலையா இருந்தாலும் அந்த வேலையை ஸ்மார்ட்டா செஞ்சோம்னா அந்த வேலையில இருக்கக்கூடிய கஷ்டமே தெரியாது. ஈஸியா முடிஞ்சுடும்னு சொல்லுவாங்க. அதே மாதிரிதான் நம்மளோட கிச்சன்லயுமே. நிறைய வேலைகள் நம்மளுக்கு கஷ்டமா இருக்கு, இசியா இருக்குன்னு சொல்லி இந்த வேலைகள் செய்யாமலேயே போட்டுருப்போம். ஆனா எனக்கு தெரிஞ்ச, நான் ஃபாலோ பண்ற அண்ட் இன்னும் சில பேர் கிட்ட கேட்டு தெரிஞ்சுகிட்ட கிச்சன் டிப்ஸ் பத்தி தான் இன்னைக்கு நம்ம பார்க்கப்போறோம்.
எண்ணெய் பாட்டில் பிசுபிசுப்பைத் தவிர்க்க எளிய வழி.
நம்ம எல்லார் வீட்லயும் இருக்கிற ஒரு விஷயம் அப்படின்னா எண்ணெய் கேன், எண்ணெய் பாட்டில்தான். இந்த எண்ணெய் பாட்டில் யூஸ் பண்ணும்போது ஊத்துவோம். இதுல இருந்து எண்ணெய் சொட்டு சொட்டா வழிஞ்சு இந்த சைடு எல்லாம் வழிஞ்சு இருக்கும். இப்ப நம்ம கையில எல்லாம் தொடும்போது பிசுபிசுன்னு இருக்கும். சில டைம் தவறி விழுகிறது கூட வாய்ப்பு இருக்கு. சமயத்துல நம்ம என்ன பண்ணலாம்னா நம்ம வீட்ல குழந்தைகள் இருப்பாங்க இல்ல அவங்களோட ஷாக்ஸ் ஏதாவது பிஞ்சு போனதோ இல்ல பழைய ஷாக்ஸோ இருக்கும்ல, அந்த ஷாக்ஸ சுத்தம் பண்ணி அதை இந்த பாட்டில் மேல மாட்டி விட்டுட்டோம் அப்படின்னா நம்மளுக்கு கை பிடிக்கும் போது ஒரு கிரிப் இருக்கும். சோ நம்மளோட எண்ணெய் பாட்டில் தவறி விழுகிறதுக்கு சான்ஸே இருக்காது.
தேங்காய் ஓட்டை எளிதாக எடுப்பது எப்படி?
நம்ம வீட்லயே சமையல்ல முக்கியமான விஷயம் அப்படின்னா தேங்காய் தான். இந்த தேங்காவ நம்ம குருமாக்கு, சட்னிக்கு இதுக்கெல்லாம் யூஸ் பண்ணுவோம் இல்லையா? அப்போ நம்ம தேங்காய் உடைச்சதுக்கு அப்புறம் அதை சில பேர் வந்து திருகுவாங்க, இல்ல சில பேர் கீறி போடுவாங்க. கீறி அதுக்கப்புறம் மிக்ஸில போட்டு அரைப்பாங்க. கீறதுக்கு கஷ்டமா இருக்குற சமயத்துல நம்மளோட அடுப்புல அந்த மூடிய வாட்டிட்டு அதுக்கப்புறம் கீறனும் அப்படின்னா கஷ்டப்படாம அந்த கீறல்கள் விழுகிறதுக்கு ஈஸியா இருக்கு. சோ இந்த டிப்பும் எனக்கு புதுசா இருந்தது, நீங்களும் ஃபாலோ பண்ணி பாருங்க.
சின்ன வெங்காயம்/பூண்டு விரைவாக உரிக்க டிப்ஸ்.
நிறைய பேர் வீட்ல சமையக்கட்டுல இருக்கிற ஒரு பிரச்சனை அப்படின்னா இந்த பூண்ட உரிக்கிறதுதான். சின்ன பல்லு பூண்ட நிறைய பேர் வாங்கவே மாட்டாங்க. எதுக்காக அப்படின்னா ஏன்னா இது விலை கம்மியாவே இருந்தாலும் இத உரிக்கிறது கஷ்டம், இதுல நேரத்தை செலவிடுறதுக்கு பதிலா கொஞ்சம் அதிகமான காசை போட்டு பெரிய பல்லு பூண்ட வாங்கிட்டு போயிடலாம்னு நினைப்பாங்க. ஆனா இனிமே நீங்க இந்த ட்ரிக்கை யூஸ் பண்ணி பாத்தீங்கன்னா செலவு கம்மியாவும் ஆச்சு, பூண்டு உங்களுக்கு கிடைச்ச மாதிரியும் ஆச்சு. என்ன அப்படின்னா சுடு தண்ணில நம்ம சமைக்க ஆரம்பிக்கும் போதே இந்த சின்ன பல்லு பூண்டெல்லாம் போட்டு ஊற வச்சுடுங்க. அப்புறம் என்ன தக்காளி, வெங்காயம் இதெல்லாத்தையும் நீங்க வெட்டி முடிச்சதுக்கு அப்புறம், எல்லா காய்கறியும் வெட்டி முடிச்சதுக்கு அப்புறம் சுடு தண்ணில இருக்கிற பூண்ட எடுத்து நீங்க உரிச்சு பார்த்தீங்க அப்படின்னா ஆட்டோமேட்டிக்கா அது உரிந்து வரும். இந்த டிப் நான் வந்து நம்ம வீட்ல திருவிழா நாட்கள் எல்லாம் நிறைய பூண்டு உரிப்போம் இல்ல, அப்போதைக்கு ஃபாலோ பண்ணுவாங்க. இது உங்களுக்கும் யூஸ்ஃபுல்லா இருக்கும்னு நினைக்கிறேன்.
காய்கறி வெட்டும் பலகை (Cutting Board) ஆடாமல் இருக்க வழி.
நிறைய பேர் வீட்ல காய்கறி, வெங்காயம், தக்காளி எல்லாம் கட் பண்ணும் போது ஒன்னு இந்த திண்ணையில கட் பண்ணுவாங்க இல்லாட்டி தட்டுல வச்சு கட் பண்ணுவாங்க. சில பேர் எல்லாம் வுட், மரத்தால் செய்யப்பட்ட அந்த வெஜிடபிள் கட்டர்ல வச்சு கட் பண்ணுவாங்க. அந்த வெஜிடபிள் கட்டர்ல கட் பண்ணும்போது அந்த கட்டர் வந்து சும்மா ஆடிக்கிட்டே இருக்கும் நம்மளால ஒழுங்காவே கட் பண்ண முடியாது. இதுக்கு வந்து நம்ம சைடுல ரெண்டு சைடுலயும் ஒரு ரப்பர் பேண்ட்ட போட்டு விட்டுட்டிங்க அப்படின்னா அந்த கிரிப்ல ஆடாம நம்ம ஈஸியா கட் பண்ண முடியும் அப்படின்னு சொல்றாங்க. இல்ல, கட் பண்ண முடியும்னு நான் சொல்றேன் ஏன்னா இதை நான் வீட்ல ட்ரை பண்ணி பார்த்தேன். அண்ட் இந்த டிப்ஸ் உங்களுக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்.
கிச்சன் சிங்க் அடைப்பை நீக்க எளிய ஹேக்ஸ்.
சமையக்கட்டுல எல்லாருக்கும் இருக்குற ஒரு முக்கியமான பிரச்சனை அப்படின்னா இந்த சிங்க் கிளீன் பண்றதுதான். அதுவுமே இந்த தண்ணி ஒழுங்கா அடைச்சுக்கிட்டு ஏதாவது சாப்பாட்டுல கூடிய விஷயங்கள் எல்லாம் போய் அந்த ஓட்டையில அடைச்சுக்கும். அதை என்னதான் நம்ம கிளீன் பண்ணி விட்டாலும் அந்த டியூப் வழியா தண்ணி போகாம இருக்கும் அப்படின்னு எல்லாம் சொல்லுவாங்க. சோ வாரத்துல ஒரு நாளோ இல்ல ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவையோ நம்ம சிங்கை கிளீன் பண்ணும் போது பேக்கிங் சோடா லைட்டா தூவி விட்டுட்டு, வினிகரை கொஞ்சம் ஊத்தி விட்டுட்டு, கொஞ்சம் ஹாட் வாட்டரா அதுல ஊத்துனோம் அப்படின்னா அந்த சிங்க் வந்து ஆட்டோமேட்டிக்கா கிளீன் ஆயிடும். அப்புறம் அதுல இருக்கக்கூடிய அடைச்சிருக்க கூடிய விஷயங்கள் எல்லாமே கீழ வழியா ஓடிடும். இது வந்து ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவை ட்ரை பண்றது பெஸ்ட். இதையும் என்னோட சிங்க்ல நான் ட்ரை பண்ணி பார்த்தேன்.
கொத்தமல்லி தழை நீண்ட நாள் வாடாமல் இருக்க…
நம்ம வீட்ல இப்ப ஒரு கொத்தமல்லி கட்டு வாங்கிட்டு வந்திருக்கோம்னு வைங்க, அதை வாடாம வச்சிருந்தோம்னா ஒரு வாரத்துக்கு இல்ல ரெண்டு வாரத்துக்கு நம்ம சட்னிக்கோ, குழம்புக்கோ மட்டும் மேல தூவி விடுறதுக்கு நிறைய விஷயங்களுக்கு அதை பயன்படுத்தலாம். ஆனா நம்ம ஒரு வாரத்திலேயே அது வாடி போயிருதுன்னு சொல்லி பாதி கொத்தமல்லியை நம்ம குப்பைத் தொட்டியிலதான் தூக்கி போடுவோம். சோ இதுக்கு என்ன பண்ணலாம்னா வாங்கிட்டு வந்த உடனே அந்த வேர் எல்லாம் கட் பண்ணிட்டு ஒரு பாக்ஸ்ல கீழ டிஷ்யூ பேப்பர் வச்சிட்டு அதுக்கு மேல கொத்தமல்லியை வச்சிட்டு அதுக்கு மேல இன்னொரு டிஷ்யூ பேப்பர் வச்சிட்டு நீங்க அந்த பாக்ஸ மூடி பிரிட்ஜ்ல வச்சிரலாம். இல்ல பிரிட்ஜ்ல வைக்காம இருக்கணும் அப்படின்னா ஒரு வாட்டர் கேன்ல ஹாப்பா கட் பண்ணிட்டு அந்த வாட்டர் கேன்குள்ள வேரை கட் பண்ண கொத்தமல்லியை உள்ள வச்சுட்டு அதுக்கப்புறம் அந்த ரிமைனிங் மூடி இருக்குல்ல, நம்ம கட் பண்ண மூடி, அதை மறுபடியும் அது மேல எடுத்து மூடி வச்சிட்டோம் அப்படின்னா பிரெஷ்ஷா இருக்கும். நீங்க பிரிட்ஜ்ல வைக்க வேண்டிய தேவையையும் இருக்காது. நம்மளுக்கு தேவையானப்போ மூடிய ஓபன் பண்ணி அதுல இருந்து நம்ம எடுத்துக்கலாம்.
இப்ப நம்ம வீட்ல ஒரு பெரிய பாக்கெட் வாங்கி இருக்கோம்னு வைங்க. அந்த பாக்கெட்ல நம்ம கார்னர்ல கட் பண்ணி கொட்டுற அளவுக்கு பெரிய டப்பாவும் நம்ம கிட்ட இல்ல. வாங்கிட்டு வந்து தான் கொட்டணும் அப்படின்ற பட்சத்துல அந்த பாக்கெட்லயே வச்சு யூஸ் பண்ணும்போது ஒன்னு நமத்துப் போயிரும் இல்ல தெரியாம கீழ விழுந்து கொட்டிரும். அந்த மாதிரியான சமயத்துல இந்த பெரிய பாக்கெட்ல கார்னர்ல கட் பண்ணாம சென்டர்ல ‘V’ ஷேப்ல கட் பண்ணோம் அப்படின்னா நம்ம தேவையானதை எடுத்துக்கிட்டு இந்த ரெண்டு கார்னரையும் நம்ம சேர்த்து ஒரு நாட் போட்டு வச்சிடலாம். இது மூலமா உள்ள இருக்கக்கூடிய பொருளுக்கு எந்த பாதிப்பும் வராது. நம்மளுக்கு ஈஸியா சேவ் பண்ண மாதிரி இருக்கும்.
இப்ப நம்ம வீட்ல ஒரு கவர் வாங்கிட்டு வந்திருக்கோம் அப்படின்னா இதை கார்னர்ல கட் பண்ணி தேவையானதை எடுத்துட்டு இதை சில பேர் அப்படியே வச்சிருவாங்க, அது நமத்துப் போயிரும். இல்லாட்டி இன்னொரு பாக்ஸ்ல மாத்தி வைப்போம். அப்படி மாத்தும்போது நம்மளுக்கு கீழ சிந்திரும்ல? அப்படி சிந்தாம இருக்கணும்னா சில பேர் வந்து பேப்பரை ரோல் பண்ணி அதுல கொட்டுவாங்க. இல்ல பேப்பர் ரோல் பண்ண எனக்கு வரலை அப்படின்னா நீங்க ஈஸியான விஷயம், நம்ம வீட்ல இன்விடேஷன் எல்லாம் நிறைய வரும் பார்த்திருக்கீங்களா? அந்த இன்விடேஷனோட கார்னர்ல லைட்டா கிழிச்சு விட்டுட்டு அந்த கார்னரை டப்பாக்குள்ள வச்சிட்டு அதுல இதை கொட்டுனீங்கன்னு வைங்களேன் சூப்பரா ஒரு துளி கூட வெளிய கொட்டாம பாக்ஸ்ல நம்ம சேவ் பண்ண மாதிரி இருக்கும்.
அதே மாதிரிதான் இந்த எண்ணெயை நம்ம டப்பால மாத்தும்போது. இப்போ இந்த எண்ணெயை நான் வந்து ஒரு டப்பால மாத்தணும்னா இந்த கார்னர்ல ஓட்டை போட்டு அதுல ஊத்தும்போது எப்படியாவது ஒன்னு இல்லாட்டி ரெண்டு துளியாவது வெளிய போயிரும்ல? அந்த மாதிரி சிந்திச்சு அப்படின்னா தரையும் எண்ணெயா இருக்கும், பிசுபிசுப்பா இருக்கும். சமயத்துல அந்த டப்பாக்குள்ள ஒரு ஸ்பூனை ஒன்னு போட்டுட்டு அந்த ஸ்பூனோட சென்டர்ல இந்த எண்ணெயை ஊத்துனீங்கன்னா ஒரு துளி கூட எண்ணெய் வெளிய டிராப் ஆகாம உள்ள அந்த பாக்ஸ்ல சேவ் ஆன மாதிரி இருக்கும்.
மிக்ஸி ஜார் மற்றும் சமையல் பாத்திரங்களைச் சுத்தம் செய்ய டிப்ஸ்.
நிறைய பேர் வீட்ல இந்த மிக்ஸி ஜாருக்கு பின்னாடி அந்த வீல் இருக்கு பார்த்தீங்களா? அந்த இடத்துல ரொம்ப கருப்பா இருக்கும். அதை எப்படியாவது கிளீன் பண்ணனும் கிளீன் பண்ணனும்னு பார்ப்போம் ஆனா நம்மளால கிளீன் பண்ணவும் முடியாது. ஏன்னா ஈஸியா நம்ம கை விட்டு கிளீன் பண்ற மாதிரி இருக்காது. சோ அதுக்கு நம்ம என்ன பண்ணலாம் அப்படின்னா பேக்கிங் சோடா, வினிகர், நம்ம பாத்திரம் கழுவுறதுக்கான ஜெல் இருக்குல்ல அந்த ஜெல் எல்லாத்தையும் போட்டு கொஞ்சம் அப்படியே ஊற விட்டுட்டு நீங்க அதுக்கப்புறம் கழுவுனீங்க அப்படின்னா ஆட்டோமேட்டிக்கா அந்த பிளாக் எல்லாமே எடுத்துட்டு வந்துரும். பார்க்க புத்தம் புதுசா இருக்கும். இதுவும் நம்ம ட்ரை பண்ணி பார்த்து சொல்லலாம்.
நம்ம வீட்ல வெங்காயம், தக்காளி எல்லாம் வதக்கிட்டு சட்னிக்கு அரைக்கிறதுக்காக ஓரமா வச்சிருப்போம். அதுவும் நம்ம காலையில ஸ்கூலுக்கு கிளம்புற அவசரத்திலயும், பசங்களெல்லாம் ஸ்கூலுக்கு கிளப்பி விடணும் இல்ல நம்ம வீட்ல இருக்கறவங்க எல்லாம் ஆபீஸ்க்கு கிளப்பி விடணும் அந்த அவசரத்துலயும் சீக்கிரமா அரைக்கணும்னு சொல்லி ஊதிக்கிட்டே இருப்போம் இல்ல ஃபேன் போட்டு ஆற வச்சுக்கிட்டே இருப்போம். இந்த நேரத்துல சூடாவே இருந்தாலும் நம்ம மிக்ஸி ஜார்ல போட்டுட்டு ஒரு நாலஞ்சு ஐஸ் கியூப்பை அந்த மிக்ஸி ஜார்ல போட்டு அரைச்சாலோ இல்ல நம்ம தண்ணி சேர்க்கிறதுக்கு பதிலா இந்த கோல்ட் வாட்டர் நம்ம ஐஸ் வாட்டர் இருக்குல்ல, அந்த வாட்டரை சேர்த்து அரைச்சாலோ இந்த சூடும் இந்த ஐஸ் கியூப்பும் சேர்த்து காம்ப்ரமைஸ் ஆகிரும். சோ இது நான் வீட்ல ஃபாலோ பண்ணக்கூடிய ஒன்று ட்ரிக். இது நீங்களும் ஃபாலோ பண்ணி பார்த்துட்டு சொல்லுங்க.
நம்ம வீட்ல எல்லாம் கரண்டி கொஞ்சம் சின்னதா இருந்துச்சு அப்படின்னா நம்ம எடுத்துட்டு குழம்பு எடுத்துட்டோ இல்ல கூட்டு எடுத்துட்டோ அந்த கரண்டி அங்க வைக்கும்போது கரண்டி அப்படியே வழுக்கி குழம்புக்குள்ள விழுந்துரும் இல்ல கூட்டுக்குள்ள விழுந்துரும். விழுகாம இருக்கணும்ன்ற பட்சத்துல அந்த கரண்டில ஒரு ரப்பர் பேண்ட்ட போட்டு சுத்தி விட்டுட்டு அந்த ரப்பர் பேண்ட்ட நம்ம கிண்ணத்தோட கார்னர்ல ஒட்டி வச்சிட்டோம் அப்படின்னா உள்ள போறதுக்கு வாய்ப்பு இருக்காது. சோ இதையும் நம்ம டிப்ஸா ட்ரை பண்ணி பார்க்கலாம்.
ஒவ்வொரு கையிலும் ருசிகள் மாறும்… ஒவ்வொரு ருசியிலும் பசியும் மாறும்… சமையல் ஆறு வகை கலை அல்லவா…”